Total Pageviews

Wednesday, December 22, 2010

குறள் வழி ஆட்சி


இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

ராசாவைத் தொலைத்தொடர்புக்கு நியமித்துத் தன் குறள் வழி ஆட்சியின் மாட்சியைப் பறைசாற்றியுள்ளார் நம் முதல்வர்.



எச்சரிக்கை :
 பலவீனமான இதயம் கொண்டோர் மற்றும் ஆளுங்கட்சி எடுபிடிகள் இணைப்புகளை வாசிக்க வேண்டாம்.
வாரம் 7 நாள், தினம் 12 மணி நேரம் உழைத்து, வாரச் சம்பளம் 1000 ரூபாய் வாங்கும் திருவாளர் பொதுஜனம் இதைப் படிக்குங்கால், மாரடைப்புகோ மனச்சிதைவுக்கோ உள்ளாகலாம். அத்தகைய சூழலில் தேவைப்படும் என்ற தொலைநோக்குடன் தான் நம் முத்தமிழ் அறிஞர் இலவச Ambulance மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல் படுத்தியள்ளார். (திட்டத்திற்கு வேறு காரணம் உண்டெனச் சொல்பவர்கள் அடுக்கடுக்கான இடிகளைத் தாங்கும் திராணி பெரும்பாலானோருக்கு இல்லையென்பதை மனதில் கொள்ள வேண்டும். )




வரிப் பணத்தைத் தானே எடுத்துக்கிறாங்க... கோவணத்தையா உருவறாங்க? மானம் கோவணத்தில் மட்டும் இல்லையென்பதெல்லாம் வெற்றுப் பேத்தல்.
இந்த வெட்டிப் பேச்சுக்கிடையில் திரிஷாவுக்குக் கணுக்கால் சுளுக்கியதையும், சச்சினின் 50வது சதத்தையும் மறந்தே போனேன்....
மீண்டும் சந்திப்போம்.

Wednesday, November 24, 2010

நானும் ஒரு .......?

                                                      
"பேணாவும் பேப்பரும் இருக்கிறது என்பதற்காக மட்டும் எழுதிவிடக் கூடாது. பதிக்கப்படும் ஒவ்வொரு வாக்கியமும் அதற்கான அவசியத்துடன் மட்டுமே எழுதப்பட வேண்டும்." என்ற ஜெயகாந்தனின் கருத்தில் முழு நம்பிக்கையுடையவன்  நான். கம்ப்யுடர்களின் எண்ணிக்கைக்கு இணையாக bloggers முளைப்பதும் எனக்கு உடன்பாடு அல்ல.




 இந்நேரம் "அப்புறம் என்ன ம......க்கு நீயும் blog எழுதற? "  என்கிற கேள்வி எழாதவர்கள்
1 ) வேறு சிந்தனைகள் இல்லாத மற்றொரு சமயத்தில் படிக்கலாம்.
2 ) சொரணைக் குறைவு நோய்க்காக மருந்து உட்க்கொள்ளவோ உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவோ செய்யலாம்.
3 ) தாய் நாட்டின் இறையாண்மை பறி போவதையும், தன் இனம் படுகொலை செய்யப்படுவதையும் உணர்வின்றிச் செய்தியாக மட்டும் தருகின்ற NDTV , Times Now , CNN IBN போன்ற so called செய்திச் சேனல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

பிறந்தது முதல் திராவிடக்  கட்சிகளின் ஆட்சியில் வாழும் இளையனுக்கு, கொள்கை வேறு, செயல் வேறு என்றிருப்பதில் வியப்பொன்றும் இருக்கத் தேவையில்லை.
மிக உயர்ந்த கொள்கைகள் என்று நானே எண்ணுகிற, சில விஷயங்களைப் பேசவும் விவாதிக்கவும் செய்து விட்டு, நடைமுறையில் அவற்றில் பெரும்பாலானவற்றைக் கடைப்பிடிக்கத் தைரியமில்லாத, வக்கில்லாத, இதே தகுதிகள் கொண்ட பெரும்பான்மை சமூகத்தால் "நல்லவன்" எனப்படும் ஒரு மானங்கெட்ட முரண்பாட்டுக் குவியல் நான்.

இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது.
"நுகர்வுக் கலாச்சாரத்தால் saving-economy spending-economyஆக மாறுகிறது. இது மாபெரும் தவறு" என்று வெளியில் பேசிக் கொண்டே, நண்பனுக்குக் கைக்குட்டை வாங்கப் போகையில் discountகள் வசம் மனம் மயங்கி 2 phant வாங்கி வருவது ஒரு உதாரணம்.

 நான் இத்தகையவனாக மாறி விட்டேனே என்ற உறுத்தலின் பக்கவிளைவு தான் " நான் இத்தகையவன்" என உலகிற்குப் பறைசாற்றும் முயற்சியின் இந்த blog வடிவம்.
ஒரு இலக்கியப் படைப்பையோ, வட்ட, மாவட்ட, மாநில, மத்திய, உலக நிகழ்வுகள், சினிமா, விளையாட்டு விமர்சனங்களையோ எதிபார்த்து வாசித்தவர்கள் மன்னிக்கவும். என்னைப் போலவே வாழும் முரண்பாட்டு நண்பர்கள் ஒரு மிகப் பெரிய market.  அவர்களைச் சந்தைப் படுத்திய corporateகளின் வரிசையில் எனது blogயும் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்........