Total Pageviews

Wednesday, November 24, 2010

நானும் ஒரு .......?

                                                      
"பேணாவும் பேப்பரும் இருக்கிறது என்பதற்காக மட்டும் எழுதிவிடக் கூடாது. பதிக்கப்படும் ஒவ்வொரு வாக்கியமும் அதற்கான அவசியத்துடன் மட்டுமே எழுதப்பட வேண்டும்." என்ற ஜெயகாந்தனின் கருத்தில் முழு நம்பிக்கையுடையவன்  நான். கம்ப்யுடர்களின் எண்ணிக்கைக்கு இணையாக bloggers முளைப்பதும் எனக்கு உடன்பாடு அல்ல.




 இந்நேரம் "அப்புறம் என்ன ம......க்கு நீயும் blog எழுதற? "  என்கிற கேள்வி எழாதவர்கள்
1 ) வேறு சிந்தனைகள் இல்லாத மற்றொரு சமயத்தில் படிக்கலாம்.
2 ) சொரணைக் குறைவு நோய்க்காக மருந்து உட்க்கொள்ளவோ உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவோ செய்யலாம்.
3 ) தாய் நாட்டின் இறையாண்மை பறி போவதையும், தன் இனம் படுகொலை செய்யப்படுவதையும் உணர்வின்றிச் செய்தியாக மட்டும் தருகின்ற NDTV , Times Now , CNN IBN போன்ற so called செய்திச் சேனல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

பிறந்தது முதல் திராவிடக்  கட்சிகளின் ஆட்சியில் வாழும் இளையனுக்கு, கொள்கை வேறு, செயல் வேறு என்றிருப்பதில் வியப்பொன்றும் இருக்கத் தேவையில்லை.
மிக உயர்ந்த கொள்கைகள் என்று நானே எண்ணுகிற, சில விஷயங்களைப் பேசவும் விவாதிக்கவும் செய்து விட்டு, நடைமுறையில் அவற்றில் பெரும்பாலானவற்றைக் கடைப்பிடிக்கத் தைரியமில்லாத, வக்கில்லாத, இதே தகுதிகள் கொண்ட பெரும்பான்மை சமூகத்தால் "நல்லவன்" எனப்படும் ஒரு மானங்கெட்ட முரண்பாட்டுக் குவியல் நான்.

இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது.
"நுகர்வுக் கலாச்சாரத்தால் saving-economy spending-economyஆக மாறுகிறது. இது மாபெரும் தவறு" என்று வெளியில் பேசிக் கொண்டே, நண்பனுக்குக் கைக்குட்டை வாங்கப் போகையில் discountகள் வசம் மனம் மயங்கி 2 phant வாங்கி வருவது ஒரு உதாரணம்.

 நான் இத்தகையவனாக மாறி விட்டேனே என்ற உறுத்தலின் பக்கவிளைவு தான் " நான் இத்தகையவன்" என உலகிற்குப் பறைசாற்றும் முயற்சியின் இந்த blog வடிவம்.
ஒரு இலக்கியப் படைப்பையோ, வட்ட, மாவட்ட, மாநில, மத்திய, உலக நிகழ்வுகள், சினிமா, விளையாட்டு விமர்சனங்களையோ எதிபார்த்து வாசித்தவர்கள் மன்னிக்கவும். என்னைப் போலவே வாழும் முரண்பாட்டு நண்பர்கள் ஒரு மிகப் பெரிய market.  அவர்களைச் சந்தைப் படுத்திய corporateகளின் வரிசையில் எனது blogயும் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்........

5 comments:

  1. Great Attempt!! Go Ahead!!

    பொன்மணி யார் என்று தெரியாதவர்களுக்கு!!
    இது தவழும் குழந்தையின் முதல் நடை வண்டி முயற்சி இல்லை; நன்கு ஓட தெரிந்த குழந்தையின் முதல் marathan முயற்சி!!

    நான் யார் என்று கேட்பவர்களுக்கு!!
    marathan மைதானத்தில், உணர்ச்சி பெருக்கில்(பெருமிதத்தில்) நிலை கொள்ளாமல் முதல்வனாய் எழுந்து விசில் அடிப்பவன்!!

    ReplyDelete
  2. first vaa(o)ice atlast came out... finally u r here which u should've started couple of yrs back.. keep it up buddy...

    ReplyDelete
  3. மிகச் சிறந்த துவக்கம் ...!!

    People use this space to learn blogging, but you strike it off at the very first shot... Welcome...:)

    உனது ஒவ்வொரு எழுத்தும் பதிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  4. An Amazing article .. A very rich read . Udal Mannukku Uyir thamizhukku

    ReplyDelete
  5. இனிய வரவு!
    வா நண்பா, உன்ன மாதிரி ஆளுங்கதான் இங்கு தேவை!

    ReplyDelete