Total Pageviews

Saturday, January 21, 2012

பயணம்

 விலங்குகளைச் சவாரிக்குப் பழக்கப்படுத்திய காலம் முதலே பயணம் என்பது மனிதனுக்கு புத்துணர்வு அளிப்பதாகவும் களிப்படையச் செய்வதாகவும் மாறியிருக்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன் வரை பயணம் வியாபாரிகளுக்கும் வீரர்களுக்குமானதாகவே இருந்து. (Exceptions can be ignored) இன்று அது யாவர்க்குமான ஒரு மிகப் பெரிய industry.
சுற்றுலா தரும் இன்பம் உடன் வருவோரும் பயணச் சுகமும் சார்ந்ததே என்பது என் கருத்து. முக்கொம்புக்கு அரைக்காத தூரத்தில் இருப்பவனுக்கு 300 மைல் தொலைவிலிருந்து அங்கு வருபவன் பெறும் இன்பம் கிடைக்காதென்பது திண்ணம். கடந்த காலத்தைப் பொருத்தவரை பயணம் என்பது அனுபவத்தைக் காட்டிலும் அவசியத்தின் பொருட்டாகவே இருந்துள்ளது.(காரணத்திற்காக காரியம்)


கடல் புறாவும் Gulliver's Travelsம் படிக்கும் போது அடைந்த இன்பத்தின்
சுவடு கூட Indian railwaysன் தொடர் வண்டிப் பயணங்களில் நான் உணர்ந்ததில்லை. Sleeper class berthகளின் தனித்தன்மை கொண்ட வாசனையோ, நீல நிற berthகளில் படிந்திருக்கும் சாம்பல் நிறக் கரையோ, கீழே வைத்திருக்கும் உடைமைகள் களவு போகாமல் இருக்க வேண்டுமென்ற பயமோ காரணமாக இருக்கலாம். இரயில பயணங்களில் நல்ல விஷயம்,
குறுக்கீடில்லாமல் புத்தகம் வாசிக்கலாம். இரவுப் பயணங்கள் அந்த வாய்ப்பையும் பிடுங்கிக் கொள்கின்றன. இரவுப் பயணங்களின் போது
upper berthல் படுத்துக் கொண்டு, pen tourchஐ வாயில் கடித்துக் கொண்டு புத்தகம் படித்த அனுபவம் நிறைய உண்டு. (இலவச இணைப்பாக, கழுத்து வலி உறுதி).


கடந்த முறை மதிய ஊர்தியில் செல்ல நேர்ந்தது. சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அந்த வண்டியில் இதற்கு முன்னரும் பயணம் செய்ததுண்டு. 6 மாதங்களுக்கு முன் அதே வண்டியில் சென்ற போது lower berth பதிவு செய்திருந்தேன். Middle berthகாரர்களும் open ticket நண்பர்களும் கீழிருக்கையை ஆக்கிரமித்துக் கொள்ள, அரையடி அகலத்தில் உட்கார்ந்து கொண்டே 7 மணி நேரம் பயணம் செய்ய நேர்ந்தது. இதில் எனதருகே ஒரு காதல் ஜோடி வேறு. அந்தப் பெண் open ticket வாங்கிக் கொண்டு காதலன் கொடுத்த தைரியத்தில் எனது இருக்கையை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட என்னால், அவன் மடியில் அவள் படுத்துறங்கியதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரண்டு காரணங்கள்.

1) Reserve செய்த நான் உட்க்கார்ந்து வர, என் berth-ல் அவள் படுத்துக் கொண்டது.
2) படுத்துறங்க அவனுக்கு ஒரு காதலி இருந்தது. வயிற்றெரிச்சல் தான்...!

அந்த அனுபவம்  நினைவிலிருக்க, இம்முறையும் lower berth என்றதும் யாரும் வரும் முன் upper berth-ஐ ஆக்கிரமித்துக் கொண்டேன். உரியவர் கேட்டால் berth-ஐக் கொடுக்கலாம் என்று ஒரு புத்தகத்தைப் படிக்கவும் ஆரம்பித்து விட்டேன். அன்று அந்தப் பெட்டி முழுவதும் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கார்த்திகை மாதம் என்பது நினைவிலுறைத்தது. அந்தக் கூட்டத்தில் இரு சிறுமி சாமிகள் இருந்தனர். (ஐயப்ப பக்த்தர்கள் சாமிகள் தானே?) வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுமிகள் கதை பேசவும், விளையாடவும், ஆரஞ்சுப் பழம் சாப்பிடவும் ஆரம்பித்து விட்டனர். பழங்கள் எப்போதும் பிறர் திண்ணும் போது தான் மிகச் சுவையாகத் தெரிகின்றன போலும். (அதற்காக நானொன்றும் அவர்கள் திண்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.) என்னையுமறியாமல் அவர்களை ரசித்துக் கொண்டிருந்தேன் போலும். அதை கவனித்த ஒரு சிறுமி பழம் வேண்டுமா என்றாள். நாசமாய்ப் போன formality வேண்டாம் என்று சொல்ல வைத்தது. குட்டிப் பெண்கள் இருவரும் என்னோடு வாயாடத் தொடங்கினர்.

அவர்களது பெயர் ப்ரியா, விமலா என்று அறிந்து கொண்டேன். என் பெயரைச் சொன்னவுடன் இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இது ஒன்றும் எனக்குப் புதிதல்லவாகையால் அவர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். நான் கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்து " என்ன அண்ணா, bible படிக்கிறீங்கள?" என்று கேட்டாள் 7  வயதான ப்ரியா. அப்புத்தகத்தை எழுதிய சாரு நிவேதிதா கேட்டிருந்தால் பூரித்துப் போயிருப்பார். கல்லூரிப் பருவத்தைக் கடந்தவர்கள் வார, மாத இதழ்களைக் காட்டிலும் பெரிய size புத்தகங்களைப் படித்தால் அது பைபிள் ஆகவே இருக்க முடியும் என்று பாலகர்கள் முடிவு செய்யும் வகையில் தான் நாம் வாழ்கிறோம் என்பது வேதனைக்குரியது.

இரு வாண்டுகளும் வந்து என் upper berth ல் அமர்ந்து கொண்டு என்னுடன் விளையாட ஆரம்பித்தனர். nursey பள்ளியில்  நான் விளையாடிய அதே விளையாட்டுகள் இன்னும் உயிர்ப்புடன் இருந்தன.

உச்சி விளாம்பழத்தின் உட்ச்சுளையும் பச்சேலப்
பொடியும் பாங்கைக் கலந்தள்ளி இச் இச்சென
உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சை முத்தக் கீடாமோ...!

பாவேந்தரின் வரிகள் தான் எத்தனை உண்மையானவை....! 
இதைக் காட்டிலும் இன்பமான தருணமும் உளதோ என்றே தோணிற்று. உள்ளது என்று புரிய வைத்தது சேலத்திற்குப் பிறகான பயணம்.
சேலத்தில் நிறையப் பேர் எங்களது compartment ல் ஏறினர். அன்று nursing கல்லூரித் தேர்வுகள் முடியும் நாள் என்று பிறகு தெரிந்து கொண்டேன். சேர நன்னாட்டிற்குச் செல்லும் அந்த தொடர் வண்டியில் ஏறியவர்கள் மலையாளப் பெண்கள். (ஏறக்குறைய அனைவரும்). அவர்கள் யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. தன்னுடைய இருக்கைக்குப் போகிறேன் என்று கீழே குதித்தாள் விமலா. ஒரு கட்டுப்படுத்திய அலறல் கேட்டது. கீழே நின்றிருந்த ஒரு அழகான (அழகு என்ற வார்த்தை அவளது அழகுக்கு நிச்சயம் நியாயம் செய்திருக்கவில்லை ) பெண்ணின் காலை இந்தச் சிறுமி மிதித்து விட்டாள். நான் கவனித்த நொடியில் அந்தப் பதுமை தன் வலியை மறைத்துக் கொண்டு தன் மீது விழுந்த சிறுமியைப் பார்த்து "Are you alright?" என்றாள். 

இதை எழுதத் தொடங்கி 15 மாதங்கள் ஆகின்றன. காலாண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதினேன். இதன் முதல் பத்தி இப்போது படிக்க எனக்கே பிடிக்கவில்லை. சிலருக்காவது இதை மேற்கொண்டு படிக்கும் ஆர்வம்  இருந்தால் மட்டும் தொடரும்..........

 

1 comment:

  1. பயணங்கள் தொடரட்டும்... கேட்க ஆவலாக இருக்கு..... :)

    ReplyDelete